UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:44 PM
ஆன்மிகம்
ஆன்மிக சொற்பொழிவு
திருவாசகம் விளக்க உரை ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
திருஞான சம்பந்தர் அருளிய இரண்டாம் திருமுறை, பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர், சைவ சித்தாந்த சபை. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
பொது
தேர்தல் பிரசாரம்
த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து, முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரம், ரோடு ஷோ, மாருதி நகர், உடுமலை ரோடு, ஐந்து சாலை சந்திப்பு, மீனாட்சிபுரம், குளத்துப்பாளையம், கரையூர், மூலனுார், வஞ்சியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகள் – காலை 11:00 மணி முதல்.
விதை விதைக்கும் விழா
பனை விதைகள் விதைக்கும் விழா, நொய்யல் பாலத்தின் மேற்கே தென்கரை, வடகரை, அக்ரஹாரபுத்துார், மங்கலம். ஏற்பாடு: உதயம் பவுண்டேஷன், வனத்துக்குள் நொய்யல், பனைகாக்கும் நண்பர்கள், சாமளாபுரம் குளம் காக்கும் அமைப்பு. காலை 7:00 மணி.
சிறப்பு மருத்துவ முகாம்
இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், ஸ்ரீ சரண் மருத்துவமனை, போயம்பாளையம் பிரிவு, பி.என். ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
கண் சிகிச்சை முகாம்
* இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், திருப்பூர். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
* ழகரம் கிளினிக், சிட்கோ மெயின் கேட் எதிரில், சிட்கோ, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
ஷாப்பிங் திருவிழா
‘ஹல்லோ மெல்லா’ சீசன் – 4, ஸ்ரீ மணி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
இருதய பரிசோதனை முகாம்
இலவச இருதய பரிசோதனை, பொது, கண் சிகிச்சை முகாம், லயன்ஸ் கிளப் பார்மஸி வளாகம், காந்தி நகர், திருப்பூர். ஏற்பாடு: சென்டரல் லயன்ஸ் கிளப் மற்றும் அறக்கட்டளை. காலை 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
கருத்தரங்கம்
‘ பெண்கள் முன்னேற்றமும் குப்பையில்லா தமிழகமும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம், ஸ்ரீகிருஷ்ணா மஹால், கணக்கம்பாளையம், பெருமாநல்லுார். ஏற்பாடு: வீ தி லீடர்ஸ் அமைப்பு. காலை 9:30 மணி.
விருது வழங்கும் விழா
ரத்தான முகாம், ரத்ததானம் வழங்கியவர்களுக்கு விருது வழங்கும் விழா, ஸ்ரீ சரண் மருத்துவமனை, போயம்பாளையம் பிரிவு, பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வலிமை சேவை அமைப்பு. காலை 9:30 மணி.
‘சிரிப்போம் சிந்திப்போம்’ நிகழ்ச்சி
ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம் டிரஸ்ட். ‘மனதில் உறுதி வேண்டும்’ எனும் தலைப்பில் தன்னம்பிக்கை பேச்சாளர் சுமதிஸ்ரீ, ‘சிரிப்பு யோகா’ எனும் தலைப்பில், சிரிப்பானந்தா பேச்சு – மாலை 5:00 மணி.
கருத்தரங்கம்
உற்பத்தி மேம்பாடு குறித்த கருத்தரங்கம், சுபாஷ் ஸ்கில்ஸ் அகாடமி, அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: டீசா அமைப்பு. காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
பிறந்த நாள் விழா
நடிகர் சிவாஜி 98வது பிறந்த நாள் விழா, மக்கள் மாமன்ற அலுவலகம், மங்கலம் ரோடு, திருப்பூர். மதியம் 2:00 மணி.
விளையாட்டு
கபடி
அரசு ஊழியர், பொதுப்பிரிவினர், கல்லுாரி மாணவியருக்கான முதல்வர் கோப்பை மாவட்ட கபடி போட்டி, காயத்ரி ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.
