/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமலர்' நாளிதழ் சார்பில் இன்று இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி
/
'தினமலர்' நாளிதழ் சார்பில் இன்று இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி
'தினமலர்' நாளிதழ் சார்பில் இன்று இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி
'தினமலர்' நாளிதழ் சார்பில் இன்று இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி
ADDED : ஜூன் 28, 2025 11:53 PM
திருப்பூர் : 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர் வித்யாகார்த்திக் திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது.
இன்ஜினியரிங் படிப்பில் எந்த துறையை தேர்வு செய்தால் எதிர்காலம் சிறக்கும் என்பதை அறிந்து கொள்ள, பெற்றோர், மாணவர்கள் விரும்புகின்றனர். இதை முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியன சார்பில், 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2025' வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், இன்று நடக்கிறது.
காலை 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் ஆகியன இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு, கல்வியாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியாக சாய்ஸ் பில்லிங் பதிவிடுவதற்கான வழிமுறைகள் மற்றும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறை உள்ளிட்டவை குறித்து, சென்னை, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் விளக்கம் அளிக்கிறார். நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வேலை வாய்ப்பு, கோர் இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வது, வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து, கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா ஆலோசனை வழங்குகிறார்.
பெற்றோரே... மாணவ, மாணவியரே... எதிர்காலத்தை முடிவு செய்வது குறித்த, இந்த பயனுள்ள நிகழ்ச்சியை மிஸ் பண்ணாதீங்க!