/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தக்காளி சாகுபடி பாதிப்பு; விலை சரிவால் விவசாயிகள் வேதனை
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தக்காளி சாகுபடி பாதிப்பு; விலை சரிவால் விவசாயிகள் வேதனை
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தக்காளி சாகுபடி பாதிப்பு; விலை சரிவால் விவசாயிகள் வேதனை
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தக்காளி சாகுபடி பாதிப்பு; விலை சரிவால் விவசாயிகள் வேதனை
ADDED : பிப் 04, 2025 11:53 PM

உடுமலை; உடுமலை நகராட்சி சந்தைக்கு, தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், விலையும் குறைந்துள்ளதால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது.
இப்பகுதிகளில், ஏறத்தாழ, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படும் நிலையில், விளையும் காய்கறிகளை, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றம், காலை, மாலை நேரங்களில் பனி அதிகரிப்பு மற்றும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால், தக்காளி செடிகள் பாதித்துள்ளன.
காய்கள் தரம் குறைந்தும், அழுகல், வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை மற்றும் சுற்றுப்புற சந்தைக்கு, வழக்கமாக நடப்பு சீசனில், 50 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும் நிலையில், செடி மற்றும் மகசூல் பாதிப்பு காரணமாக, வரத்து பெரிதும் சரிந்துள்ளது.
தினமும் சராசரியாக, 5 ஆயிரம் முதல், 10 ஆயிரம் பெட்டிகள் வரை மட்டுமே வரத்து காணப்படுகிறது. வரத்து குறைந்துள்ள நிலையிலும், விலை உயராததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, ரூ.200 வரை மட்டுமே விற்று வருகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மகசூல் பெருமளவு பாதித்துள்ள நிலையில், வியாபாரிகள் வருகையும் குறைந்துள்ளதால், விலை உயரவில்லை. தக்காளிக்கு, நாற்று, உழவு, மருந்து, பறிப்பு கூலி என, ஏக்கருக்கு, 40 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், மகசூல் பாதிப்பு, விலை குறைவு காரணமாக, சிக்கல் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.