/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தைக்கு வரத்து குறைவு; உயர்கிறது தக்காளி விலை
/
சந்தைக்கு வரத்து குறைவு; உயர்கிறது தக்காளி விலை
ADDED : ஜன 29, 2025 10:50 PM

உடுமலை; உடுமலை தினசரி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, விலை உயரத்துவங்கியுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்று பாசனத்துக்கு, தக்காளி பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு, உடுமலை தினசரி சந்தைக்கு பல ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்து இருக்கும்.
கடந்த சில நாட்களாக, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், 14 கிலோ எடை கொண்ட பெட்டி, 120 - 200 ரூபாய் வரை ஏலம் போனது.
'சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது; மழை இடைவெளி விட்டு, வெயில் துவங்கியுள்ளதால், விரைவில் வரத்து சீராகும் வாய்ப்புள்ளது,' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக வரத்து குறைந்து, 14 கிலோ எடை கொண்ட பெட்டிக்கு, 40 ரூபாய் மட்டுமே விலை உயர்ந்துள்ளது. தக்காளிக்கு நிலையான விலை கிடைக்கவும், மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும் அரசு உதவ வேண்டும். இல்லாவிட்டால், தக்காளி சாகுபடியாளர்கள் பாதிப்பது தொடர்கதையாகவே இருக்கும்,' என்றனர்.