/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி நாற்றுகள் தேக்கம்; வீண்
/
தக்காளி நாற்றுகள் தேக்கம்; வீண்
ADDED : மார் 17, 2025 01:47 AM
திருப்பூர்; தற்போது தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 20 முதல், 80 ரூபாய் வரை மட்டுமே விற்று வருவதால், நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால், தக்காளி சாகுபடி மேற்கொள்ள தயாராக இருந்த விவசாயிகள் சாகுபடி பணியை நிறுத்தியுள்ளனர்.
இதனால், ஒவ்வொரு நாற்றுப்பண்ணைகளிலும், ஒரு லட்சம் முதல், 5 லட்சம் நாற்றுகள் வரை தேக்க மடைந்துள்ளது. இந்த நாற்றுகளை, 25 முதல் 30 நாட்களில், வயல்களில் நடவு செய்யாவிட்டால், முழுமையாக வீணாகும் நிலையும், பல லட்சம் ரூபாய் நிதி இழப்பும் ஏற்படும் சூழல் உள்ளது.
நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், 'வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, விலை சரிவு, கடும் வெயில் காலத்தில் தக்காளி செடிகளை காப்பாற்றுவதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளவில்லை. இதனால், தற்போது நாற்றுப்பண்ணைகளில், லட்சக்கணக்கான நாற்றுகள் தேக்கமடைந்து, வீணாகியுள்ளது.
அடுத்து துவங்கும் கோடை மழையை பொறுத்து, விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொள்வர்,' என்றனர்.