ADDED : ஆக 27, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ரேஷன் கார்டுதாரர்கள், இ.கே.ஒய்.சி. (eKYC) பதிவு மேற்கொள்ளும் வகையில், வரும் 29ம் தேதி (நாளை) அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மாவட்டத்திலுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த 2, 8 மற்றும் 9ம் தேதிகளில் இ.கே.ஒய்.சி. பதிவு முகாம் நடத்தப்பட்டது. அம்முகாம்களில் பதிவு மேற்கொள்ளாதவர்கள், நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவை மேற்கொள்ளலாம். ரேஷன் கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும், இ.கே.ஒய்.சி. பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட வழங்கல் அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
