/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுவுக்கு மாற்றாக 'டானிக்' உயிருக்கே உலை வைக்கும்
/
மதுவுக்கு மாற்றாக 'டானிக்' உயிருக்கே உலை வைக்கும்
ADDED : செப் 30, 2024 05:53 AM

ராஜ்குமார், பொது நல மருத்துவர், இந்திய மருத்துவர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர்: மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்கள் பலர், சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்து மாத்திரைகளையும் போதைக்காக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால், சில இருமல் 'டானிக்'குகளை போதைக்காக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அதுபோன்ற இருமல் மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் வழங்கக் கூடாது.
ஆனால், ஆன்லைனில் எளிதாக கிடைப்பதாலும், சில மருந்து கடையினர் டாக்டரின் பரிந்துரை இன்றி அதுபோன்ற மருந்துகளை விற்பதாலும், இளைஞர்கள் பாதை மாறி செல்கின்றனர். சிகிச்சைக்காக பயன்படுத்தும் இதுபோன்ற மருந்து - மாத்திரைகளை, போதைக்காக பயன்படுத்துவதால், மூளை, சிறுநீரகம், இருதயம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உயிருக்கே ஊறு விளைவிக்கும் அபாயம் உள்ளது. பாதிப்பை ஏற்படுத்தும் இது போன்ற மருந்து மாத்திரைகளை, தடை செய்ய வேண்டும் என, இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.