/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை பாதிப்பை தவிர்க்க கருவிகள்; தயார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை
/
மழை பாதிப்பை தவிர்க்க கருவிகள்; தயார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை
மழை பாதிப்பை தவிர்க்க கருவிகள்; தயார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை
மழை பாதிப்பை தவிர்க்க கருவிகள்; தயார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை
ADDED : அக் 11, 2024 12:00 AM

உடுமலை : வடகிழக்கு பருவமழை காலத்தில், பேரிடர் மேலாண்மையை பின்பற்றும் வகையில், நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்யத்துவங்கியுள்ளது. இப்பகுதிகளிலுள்ள பெரும்பாலான ரோடுகளில், மழை நீர் ஓடைகள் குறுக்கிடுகிறது.
மழை வெள்ளத்தால், போக்குவரத்து பாதிப்பதை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏற்கனவே, பாலங்கள் மற்றும் இதர பகுதிகளில், வடிகால்கள் துார்வாரப்பட்டன.
தற்போது, பருவமழை காலத்தில், பேரிடர் மேலாண்மையை பின்பற்றும் வகையில், நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டம் சார்பில், உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில், ரோட்டோர ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், போக்குவரத்து பாதிப்பதை தவிர்க்க அங்கு அடுக்குவதற்கு தேவையான மணல் மூட்டைகள்; வாகன ஓட்டுநர்களை எச்சரிப்பதற்கான தடுப்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிக காற்றினால், ரோட்டோர மரங்கள் சாய்ந்தால், அவற்றை உடனடியாக அகற்ற தேவையான கருவிகளும் வாங்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தேவையான 'லைப் ஜாக்கெட்'டுகளும் வழங்கப்பட்டது. உதவி கோட்ட பொறியாளர் ராமுவேல் பணியாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.