ADDED : ஜூலை 29, 2025 11:48 PM

திருப்பூர்; தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூரில் தீப்பந்தம் கையிலேந்தி போராட்டம் நடந்தது.
சாலை பணியாளர்களில் இறந்தவர்களின் குடும்பத்தில் கருணை நியமனம் வழங்க கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சைால ஆணையத்தை கலைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் திருப்பூர் கோட்டம் சார்பில், திருப்பூரில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நேற்று மாலை தீப்பந்தம் கையிலேந்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு திருப்பூர் கோட்ட தலைவர் கருப்பன், கோட்ட துணை தலைவர்கள் அண்ணாதுரை, சிவக்குமாரன், கோட்ட இணை செயலாளர்கள் கருப்பன், சின்னசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் ராமன், மாவட்ட தலைவர் பாண்டியம்மாள் உட்பட பலர் சிறப்புரை ஆற்றினர். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி, தீப்பந்தம் கையிலேந்தி கோஷமிட்டனர்.

