/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளங்களுக்கு சுற்றுலா முக்கியத்துவம்; தொழில் நகரில் பொழுதுபோக்கு அம்சங்கள்
/
குளங்களுக்கு சுற்றுலா முக்கியத்துவம்; தொழில் நகரில் பொழுதுபோக்கு அம்சங்கள்
குளங்களுக்கு சுற்றுலா முக்கியத்துவம்; தொழில் நகரில் பொழுதுபோக்கு அம்சங்கள்
குளங்களுக்கு சுற்றுலா முக்கியத்துவம்; தொழில் நகரில் பொழுதுபோக்கு அம்சங்கள்
ADDED : அக் 24, 2024 11:53 PM
திருப்பூர் : தொழில் நகரான திருப்பூரில், குளங்கள் அமைந்துள்ள பகுதிகளில், சுற்றுலா முக்கியத்துவம் ஏற்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது. நஞ்சராயன் குளம், ஆண்டிபாளையம் குளத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சாமளாபுரம் குளம் அருகே வனத்துறை சார்பில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதிகளில் அமராவதி அணை, முதலைப்பண்ணை, பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை உள்ளிட்டவை சுற்றுலா முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. ஆனால், தொழில் நகரான திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சுற்றுலா சார்ந்த விஷயங்கள் எதுவுமில்லை. நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பறவைகள் வந்து செல்லும் நிலையில் அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், 'சூழல் சுற்றுலா'வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மாவட்ட சுற்றுலா துறை சார்பில், திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி விடுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படகு சவாரிக்கு தேவையான படகுகள், பயணிகள் அமர்வதற்கான இடம் மற்றும் பூங்கா உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் தயாராக இருக்கின்றன.தொடர் மழை, படகு சவாரியை துவக்குவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என கூறப்படுகிறது.
சாமளாபுரத்தில், 100 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. கருமத்தம்பட்டி, சாமளாபுரம், இச்சிப்பட்டி, பூமலுார், மங்கலம் என, சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீராதாரத்தை இக்குளம் பூர்த்தி செய்து வருகிறது. நீர்வளத்துறை பராமரிப்பில் இக்குளம் இருந்து வருகிறது. ஆண்டுமுழுக்க நீர் நிரம்பியிருக்கும் இக்குளத்துக்கும், சுற்றுலா முக்கியத்துவம் வழங்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ள, சுற்றுலாத்துறை சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இக்குளத்துக்கு அருகே வனத்துறை சார்பில், பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.