/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஊராட்சிகள் இணைப்பு வளர்ச்சியல்ல... வீக்கம்'
/
'ஊராட்சிகள் இணைப்பு வளர்ச்சியல்ல... வீக்கம்'
ADDED : டிச 06, 2024 04:56 AM

திருப்பூர்,: திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி உள்ளிட்ட அ.ம.மு.க., நிர்வாகிகள் நேற்று மேயர் தினேஷ்குமாரிடம் அளித்த மனு:
திருப்பூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்த போது, இரண்டு நகராட்சிகள், எட்டு ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 60 வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 160 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இம்மாநகராட்சியில், இணைக்கப்பட்ட பகுதிகளில், 10 ஆண்டுகளாகியும் இதுவரை, மாநகராட்சி பகுதிக்கான உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
தற்போது மேலும் சில ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக தகவல் வருகிறது. இது வளர்ச்சிக்குப் பதிலாக மேலும் வீக்கத்தையே ஏற்படுத்தும். கூடுதல் நிதி ஒதுக்கி, இப்பகுதிகளுக்கு உரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். அன்னிய செலாவணி ஈட்டுவதில் திருப்பூர் முன்னணியில் உள்ளது. ஆனால், வரி வருவாய் ஈட்டுவதில் தமிழகத்தில் 5வது இடத்தில் உள்ளது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.
பொதுமக்களை நசுக்கி வரி உயர்வு என்பது மாற வேண்டும்; வரி விதிப்பில் நேர்மை என்ற நிலை வர வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள் பல்வேறு நீர் நிலை மற்றும் நீர் வழிப்பாதைகள் உள்ளன.இவற்றை முறையாக துார் வாரி பாதுகாக்க வேண்டும்; ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் தன் முழு அதிகாரத்தையும் இதில் பயன்படுத்தி இவற்றை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.