/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதி பாதிக்கும் தொழிற்சங்கம் கவலை
/
ஏற்றுமதி பாதிக்கும் தொழிற்சங்கம் கவலை
ADDED : செப் 04, 2025 11:54 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட எச்.எம்.எஸ்., கவுன்சில் அமைப்பு கூட்டம், திருப்பூர், எம்.எஸ்., புரத்திலுள்ள, கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது. மாநில செயல் தலைவர் சுப்பிரமணியப்பிள்ளை தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார்.
மாவட்ட கவுன்சிலுக்கு புதிய தலைவராக அப்புக்குட்டி, செயலாளராக முத்துசாமி, பொருளாளராக சரோஜா ஆகியோர் தேர்வாயினர்.
வரும் டிச., 14ல், கோவை மாவட்டம், காளப்பட்டி ரோடு சுகுணா கலையரங்கத்தில், தொழிற்சங்க மாநில மாநாடு நடக்கிறது. இதில், பத்தாயிரம் தொழிலாளர்களை பங்கேற்கச் செய்யவேண்டும். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், திருப்பூர் மாவட்டத்தில், ஆட்டோமொபைல் தொழிலை சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னலாடை ஏற்றுமதி துறையின் வளர்ச்சியின் ஸ்திரத்தன்மையும் வீழ்ச்சி அடையும் நிலைக்கு சென்றுவிடும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, உரிய நடவடிக்கை எடுக்காமல், அமைதி காப்பது, இந்திய பொருளாதாரத்தை பாதிக்கச் செய்துவிடும்; இதற்காக, மத்திய அரசை கண்டிக்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.