ADDED : ஜன 21, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: மோட்டார் வாகன சட்டம் 288-ஏ பிரிவை திருத்தம் செய்யக்கூடாது. தனியார் பஸ்களை நிரந்தரமாக குத்தகைக்கு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மின்சார பஸ்களை அரசே இயக்க வேண்டும். போக்குவரத்து கழக பணிமனையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் மண்டல அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. மண்டல தலைவர் செல்லதுரை தலைமை வகித்தார். மண்டல பொதுசெயலாளர் கொங்குராஜ், கோரிக்கையை விளக்கி பேசினார்.
ஏ.ஐ.டி.யு.சி. மண்டல பொது செயலாளர் குமரேசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
