/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜூலை 9ல் ஸ்டிரைக், மறியல்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
/
ஜூலை 9ல் ஸ்டிரைக், மறியல்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
ஜூலை 9ல் ஸ்டிரைக், மறியல்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
ஜூலை 9ல் ஸ்டிரைக், மறியல்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
ADDED : ஜூன் 25, 2025 11:42 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஊத்துக்குளி ரோடு ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பொது செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார்.
தொழிற்சங்க பிரதிநிதிகள் சேகர் (ஏ.ஐ.டி.யு.சி.,), குமார், உன்னிகிருஷ்ணன் (சி.ஐ.டி.யு.,), ரங்கசாமி, அறிவழகன் (எல்.பி.எப்.,), ஈஸ்வரன், செந்தில் (ஐ.என்.டி.யு.சி.,), சக்திவேல், வெங்கடாசலம் (எம்.எல்.எப்.,), முத்துசாமி, அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.,), உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், ஜூலை 9ல் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்ய, தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும். போராட்டம், குறித்து அனைத்து தாலுகாவிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
ஜூலை 9ம் தேதி, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, மத்திய தபால் நிலையம் முன், மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.