ADDED : ஆக 13, 2025 08:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மடத்துக்குளம் அருகே, அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா நடந்தது.
மடத்துக்குளம் அருகே துங்காவியில் நடந்த அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவுக்கு துங்காவி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு, நிர்வாகிகள் ரங்கநாதன், கனகராஜ், ஜெகதீசன் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சந்திரன் வியாபாரிகளின் கோரிக்கை குறித்து பேசினார். தமிழக அரசு வியாபாரிகளுக்கு நல வாரிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சங்கத்தினர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் வெற்றிவேல் நன்றி தெரிவித்தார்.