/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோர கடைகளுக்கு எதிராக வணிகர்கள் போராட்டம்
/
சாலையோர கடைகளுக்கு எதிராக வணிகர்கள் போராட்டம்
ADDED : செப் 29, 2025 12:16 AM

அவிநாசி; சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எதிராக அவிநாசியில் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டம் மேற்கொண்டனர்.
அவிநாசியில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த நான்கு நாட்களாக அகற்றி வந்தனர். வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையையொட்டி, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சாலையோர தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றை அகற்றக் கோரி அவிநாசி அனைத்து வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 7:40 மணிக்கு துவங்கிய போராட்டம் நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர், நகராட்சி அலுவலர்கள் யாரும் வராததால் காலை 11:00 மணி வரை நீடித்தது. எஸ்.ஐ., அமுல் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பாரபட்சம் இன்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரே நீதியை அரசு துறை சார்ந்த அலுவலர்கள் வழங்க வேண்டும் என கோரி திடீரென உண்ணாவிரதம் இருக்க துவங்கினர்.
நகராட்சி தலைவர் தனலட்சுமி, தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் அங்கு வந்து போராட்டம் மேற்கொண்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலையோர கடைகளை முறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நகராட்சி குழு மூலம் அனைத்து பகுதிகளிலும் இன்று ஆய்வு செய்யப்படும்; நகராட்சி அலுவலகத்தில் தலைவர், தாசில்தார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையேற்று வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
---
ஒரு படம் மட்டும்
உண்ணாவிரதத்தை துவக்கிய வணிகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
இன்று ஆய்வு, பேச்சுவார்த்தை சாலையோர கடைகளை முறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நகராட்சி குழு மூலம் அனைத்து பகுதிகளிலும் இன்று ஆய்வு செய்யப்படும்; நகராட்சி அலுவலகத்தில் தலைவர், தாசில்தார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.