/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூர்வீகத்தில் தைப்பூச விழா ராகல்பாவியில் பாரம்பரியம்
/
பூர்வீகத்தில் தைப்பூச விழா ராகல்பாவியில் பாரம்பரியம்
பூர்வீகத்தில் தைப்பூச விழா ராகல்பாவியில் பாரம்பரியம்
பூர்வீகத்தில் தைப்பூச விழா ராகல்பாவியில் பாரம்பரியம்
ADDED : பிப் 12, 2024 11:34 PM

உடுமலை;ராகல்பாவியை பூர்வீகமாகக்கொண்டு, பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஒன்று கூடி, தைப்பூச வழிபாடு செய்தனர்.
உடுமலை அருகே ராகல்பாவி கிராமத்தில் இருந்து, வியாபாரத்துக்கு வெளியூர் சென்று குடியேறியவர்கள், ஆண்டுதோறும், ஒரு நாள் பூர்வீகம் வந்து தைப்பூச விழா கொண்டாடுகின்றனர்.
அவ்வகையில், இந்தாண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. வண்ண கோலப்பொடிகளால், கலை நயம் மிக்க, 60 அடி தேரை, நிலத்தில் வரைந்து முருகரை வைத்து வழிபாடு செய்தனர்.
பின்னர், மாவிளக்கு, பொங்கல் படைத்து, பாரம்பரிய கும்மியடித்து விழாவை கொண்டாடினர். நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த விழா நடத்தப்பட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.