/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரதி வீதியில் போக்குவரத்து தடை
/
பாரதி வீதியில் போக்குவரத்து தடை
ADDED : டிச 06, 2024 04:58 AM

திருப்பூர் : திருப்பூர் நொய்யல் ஆற்றின் குறுக்கில், ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் யூனியன் மில்ரோட்டை இணைக்கும் வகையில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பணியின் ஒரு கட்டமாக, நொய்யலில் வந்து சேரும், மந்திரி வாய்க்காலை சிறுபாலம் கட்டி, கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தற்போதுபணி நடக்கிறது. இதற்காக யூனியன் மில் ரோடு மற்றும் வளம் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இவ்வழியாக வரும் வாகனங்கள், யூனியன் மில் ரோடு, பாரதி வீதி வழியாகச் சென்று வந்தன. தற்போது, பாரதி வீதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அங்கு கான்கிரீட் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வழியாக வரும் வாகனங்கள், மணியம் வீதி, சடையப்பன் கோவில் வீதி ஆகிய ரோடுகள் வழியாகச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் வாகனங்கள் கடந்து செல்வதால், பணிகளுக்கு இடையூறு வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதால், இந்த ரோடு வழியாக வாகனங்கள் சென்று வரத் தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.