/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் நாளை போக்குவரத்து மாற்றம்
/
திருப்பூரில் நாளை போக்குவரத்து மாற்றம்
ADDED : செப் 12, 2025 12:39 AM
திருப்பூர்; திருப்பூர் குமரன் சாலை, எம்.ஜி.ஆர்., சிலை அருகில், வளர்மதி பாலத்தில் சுரங்கப்பாலம் கட்மான பணி நடைபெற உள்ளதால், நாளை, (13ம் தேதி) காலை, 7:00 மணி முதல், சோதனை ஓட்டமாக, போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகர போலீஸ் அறிக்கை:
n குமரன் சாலையில் இருந்து திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு வழியாக, பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள், சாய்பாபா கோவில் சாலையில் இருந்து இடப்புறம் திரும்பி, யுனிவெர்சல் தியேட்டர் சந்திப்பை அடைந்து, வலது புறம் திரும்பி, வளர்மதி பாலம் சாலை வழியாக, எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பை அடைந்து, இடப்புறம் திரும்பி, திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு நோக்கி செல்ல வேண்டும்.
n குமரன் சாலையில் இருந்து திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள். எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பில் இருந்து, வலப்புறம் திரும்பி, பார்க் சாலையை அடைந்து, கிரிஸ்டல் சந்திப்பில் இருந்து, இடப்புறம் திரும்பி, நடராஜ் தியேட்டர், புதிய பாலம் வழியாக, எஸ்.ஏ.பி., ரெசிடென்ஸி அடைந்து, திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
n பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மங்கலம், அவிநாசி, ஊத்துக்குளி செல்லும் வாகனங்கள், திருப்பூர் மாநகராட்சி சந்திப்பில் இருந்து, டைமண்ட் தியேட்டர் வழியாக தாடிக்காரமுக்கு அடைந்து, அங்கிருந்து செல்ல வேண்டும்.
n ஊத்துக்குளி சாலையில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள், தேவைக்கேற்ப ஊத்துக்குளி சாலை இடப்புறமுள்ள ரிலையன்ஸ் கட் ரோடு அல்லது, 2வது ரயில்வே கேட் வழியாக செல்லாண்டியம்மன் கோவில் சந்திப்பை அடைந்து, எம்.ஜி.பி., வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லலாம்.
n குமரன் சாலையில் இருந்து மங்கலம் செல்லும் வாகனங்கள் எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பில் இருந்து, பார்க் ரோடு வழியாக கிரிஸ்டல் சந்திப்பை அடைந்து, நடராஜ் தியேட்டர் சாலை வழியாக யூனியன் பேங்க் அருகில் வலப்புறம் திரும்பி, தாடிக்காரமுக்கு சந்திப்பை அடைந்து, அங்கிருந்து மங்கலம் செல்ல வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.