UPDATED : செப் 08, 2026 11:13 PM
ADDED : செப் 08, 2026 09:12 PM
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் பெருகி வரும் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்காகவும், வாகன விபத்துக்களை குறைப்பதற்காக திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் அவிநாசி மற்றும் பல்லடம் ரோட்டில் போக்குவரத்து மாற்றத்தை செப்.8 முதல் சோதனை அடிப்படையில் மாற்றம் செய்து, அமலுக்கு கொண்டு வந்தனர்.
அதன் விவரம் வருமாறு:
* அவிநாசி ரோட்டிலிருந்து, டி.டி.பி. மில் ரோடு செல்லும் வாகனங்கள் பெரியார் காலனி ஆர்ச் அருகில் யூடர்ன் எடுத்து பெரியார் காலனி சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி டி.டி.பி. மில் ரோடு செல்லலாம்.
* டி.டி.பி. மில் ரோட்டிலிருந்து காந்தி நகர் மற்றும் திருப்பூர் நோக்கு செல்லும் வாகனங்கள், பெரியார் காலனி சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி, கருப்பராயன் கோவில் அருகே யூடர்ன் எடுத்து திருப்பூர் நோக்கி செல்லலாம்.
* திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து பல்லடம் நோக்கி வரும் வாகனங்களும், செரீப் காலனியிலிருந்து, மத்திய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் செல்லும் வாகனங்கள் டி.கே.டி. பெட்ரோல் பங்க் சந்திப்பு முன்பு, 50 மீட்டர் சென்று, யூடர்ன் எடுத்து பஸ் ஸ்டாண்ட் செல்லலாம்.
* ஏ.பி.டி. ரோட்டிலிருந்து சந்தைபேட்டை வழியாக பல்லடம் செல்லும் இலகுரக வாகனங்கள், சந்தைபேட்டை சந்திப்பில், இடது புறம் திரும்பி, 100 மீட்டர் சென்று யூடர்ன் எடுத்து பல்லடம் ரோடு செல்லலாம்.
* ஏ.பி.டி. ரோட்டிலிருந்து சந்தைபேட்டை வழியாக பல்லடம் செல்லும் கனரக வாகனங்கள், சந்தைபேட்டை சந்திப்பில் இடது புறம் திரும்பி, 300 மீட்டர் சென்று டி.ஆர்.ஜி. ஓட்டல் அருகே யூடர்ன் எடுத்து பல்லடம் ரோட்டில் செல்லலாம்.
* தென்னம்பாளையத்திலிருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் ரோடு செல்லும் வாகனங்கள், தென்னம்பாளையம் சந்திப்பிலிருந்து இடது புறம், 50 மீட்டர் சென்று யூடர்ன் எடுத்து, மத்திய பஸ் ஸ்டாண்ட் ரோடு செல்லலாம்.
* பல்லடம் ரோட்டிலிருந்து தென்னம்பாளையம் செல்லும் வாகனங்கள், தென்னம்பாளையம் சந்திப்பிலிருந்து, 50 மீட்டர் சென்று, யூடர்ன் எடுத்து, பல்லடம் நோக்கி சென்று, தென்னம்பாளையம் சந்திப்பில் இடது புறம் திரும்பி செல்லலாம்.
* இம்மாற்றங்களால் வாகனங்கள் சிக்னலில் அதிகநேரம் நிற்பதும், வாகன நெரிசலில் சிக்குவதும் தவிர்க்கப்படும். சோதனை முறையில் நடக்கும் இம்மாற்றத்தில் மக்கள் தங்களின் கருத்துக்கள் இருந்தால், 94981 - 81175 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். போக்குவரத்து மாற்றத்துக்கு மக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
