/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலேஜ் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
/
காலேஜ் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஆக 20, 2025 11:31 PM
திருப்பூர்; திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இன்றும் (21ம் தேதி), நாளையும் (22ம் தேதி) சோதனை அடிப்படையில், தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாநகர போலீசார் அறிக்கை:
திருப்பூர் புஷ்பா சந்திப்பிலிருந்து காலேஜ் ரோடு வழியாக, வஞ்சி பாளையம் செல்லும் வாகனங்கள், எவ்வித மாற்றமுமின்றி வழக்கம்போல் செல்லலாம். வஞ்சி பாளையத்திலிருந்து, புஷ்பா சந்திப்பு வரும் கனரக வாகனங்கள், லாரி, பஸ், வேன்கள், ஆர்.டி.ஓ., மைதானத்தில் இடதுபுறம் திரும்பி, காவிலிபாளையம், சிறுபூலுவப்பட்டி சென்று, வேலம்பாளையம் ரிங் ரோடு, டி.டி.பி., மில் வழியாக, பெரியார் காலனி சந்திப்பில் வலது புறம் திரும்பி, அவிநாசி ரோடு வழியாக புஷ்பா சந்திப்பை அடையலாம்.
வஞ்சிபாளையத்திலிருந்து புஷ்பா சந்திப்பு வரும் டூவீலர் மற்றும் கார்கள், சலவை பட்டறை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ரங்கநாதபுரம் வழியாக காலேஜ் ரோட்டை அடைந்து, புஷ்பா சந்திப்பை சென்றடையலாம்.
வஞ்சிபாளையத்திலிருந்து புஷ்பா சந்திப்புக்கு செல்லும் கனரக வாகனங்கள், சிறுபூலுவப்பட்டி, சாமுண்டிபுரம், வளையங்காடு வழியாக, குமார் நகர் சந்திப்புக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
காலேஜ் ரோட்டிலிருந்து சிறுபூலுவபட்டி செல்லும் வாகனங்கள், அணைப்பாளையம் போலீஸ் செக்போஸ்ட் அருகே, சிவ சுப்பிரமணியம் நகர் செல்ல, வலதுபக்கம் திரும்பக்கூடாது. அவ்வாகனங்கள், சலவை பட்டறை சந்திப்பில் வலது புறமாக திரும்பி, சிறுபூலுவபட்டி செல்ல வேண்டும்.