/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு; நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
/
ரோட்டில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு; நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ரோட்டில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு; நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ரோட்டில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு; நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ADDED : அக் 13, 2024 10:03 PM

உடுமலை - கொழுமம் ரோட்டில் முறையான வடிகால் இல்லாததால், மழை நாட்களில் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
உடுமலையிலிருந்து பழநி செல்வதற்கு மாற்றுப்பாதையாகவும், உரல்பட்டி, மலையாண்டிகவுண்டனுார், கொழுமம் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், உடுமலை - கொழுமம் பிரிவு ரோட்டை பயன்படுத்துகின்றன.
நாள்தோறும் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் பரப்பரப்பான பகுதியாகவும் உள்ளது.
ஆனால் மழை நாட்களில், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ரோடு மோசமாகி விடுகிறது. எஸ்.வி.புரம் பகுதியில் வடிகால் இருந்தும மழைநீர் அதிகளவில் தேங்குகிறது.
பருவ மழை அதிகரிக்கும் நாட்களில், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் முடியாத நிலையில் அப்பகுதியில் மழைநீர்தேங்குகிறது.
இதனால் பஸ்கள், மற்ற வாகனங்கள் அந்த வழிடத்தில் இயக்குவதற்கு சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் அப்பகுதியில், பஸ்சுக்கு காத்திருப்பதற்கும் முடியாமல், உடுமலை - பழநி பிரதான ரோடு வரை சென்றுதான் மக்கள் பஸ் ஏற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
மழைநீர் தேங்கியதை அறியாமல் வாகனங்கள் செல்லும் போது, நீண்ட நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
வடிகால் இருந்தும், மழைநீர் ஏன் ரோட்டில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுவது மட்டுமின்றி, இங்கு உள்ள குடியிருப்பு வாசிகளும் ஒவ்வொரு முறையும் மழைபெய்யும் போது அவதிக்குள்ளாகின்றோம்.
மழைநீர் முறையாக வடிந்து செல்வதற்கு ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை தாமதமாகும் பட்சத்தில், பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு கூறினர்.
வால்பாறை
வால்பாறையில் விடிய, விடிய பெய்த கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக வடகிழக்குப்பருவ மழை விடிய, விடிய பெய்து வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல்நீராறு, கீழ்நீராறு, நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு, பிர்லா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருவதால், வால்பாறையில் பல்வேறு இடங்களில் மண் சரிந்தும், மரம் விழுந்தும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.
தொடர் மழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை,159.18 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 839 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 421 கன அடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,)
வால்பாறை - 59, சோலையாறு - 42, பரம்பிக்குளம் - 18, ஆழியாறு - 35, மேல்நீராறு - 57, கீழ்நிராறு - 38, காடம்பாறை - 23, மேல்ஆழியாறு - 35, வேட்டைக்காரன்புதுார் - 10, துாணக்கடவு -25 , பெருவாரிப்பள்ளம் - 28, நவமலை - 36, பொள்ளாச்சி - 3 என்ற அளவில் மழை பெய்துள்ளது.
- நிருபர் குழு -