/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
/
ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 26, 2025 12:00 AM
உடுமலை; உடுமலை நேதாஜி மைதான ரோட்டில், வாகனங்கள் விதிமுறை மீறி நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
உடுமலை நேதாஜி மைதானத்தில், சுற்றுப்பகுதியிலிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயிற்சி எடுக்கின்றனர். மேலும், விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சி செய்வோர் உட்பட பலரும் மைதானத்தை பயன்படுத்துகின்றனர்.
மைதானம் அமைந்துள்ள ரோடு பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கான பிரதான பகுதியாகவும் உள்ளது. ராஜேந்திரா ரோடு பள்ளி செல்லும் மாணவர்கள், பஸ் ஸ்டாண்டிலிருந்து சந்தைக்கு செல்வோரும் இந்த வழிதடத்தையே பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பரபரப்பான இப்பகுதியில், தொடர்ந்து ரோடு ஆக்கிரமிக்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் ரோட்டின் பாதிவரை நிறுத்தப்படுகின்றன. இரவு நேரங்களில் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் சிரமப்படுகின்றனர்.
வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், இரு சக்கர வாகன ஓட்டுநர்களும் அவ்வழியாக செல்ல முடிவதில்லை. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.
விதிமுறை வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை, போக்குவரத்து போலீசார் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.