ADDED : பிப் 19, 2025 09:29 PM
அ நிறம் | அளவு
உடுமலை; உடுமலை நகரில் பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில், நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, முக்கிய வணிக கடைகள், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளன.
இந்த ரோட்டில் தள்ளுவண்டிகள் நிறுத்தப்படுவதும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
