ADDED : ஆக 28, 2025 05:43 AM
அ நிறம் | அளவு
உடுமலை; உடுமலை உழவர்சந்தை ரோட்டில், அமைக்கப்படும் தற்காலிக கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே, உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் வருகின்றனர். சந்தைக்கு வெளியில் காலை நேரங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன.
இதனால், அந்த ரோட்டில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அவற்றை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
