தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்


ADDED : செப் 15, 2025 09:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2025 09:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை; மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டிற்குள், புறநகர் பஸ்கள் செல்லாமல், ரோட்டில் நின்று பயணியரை ஏற்றிச்செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் உள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாண்டிற்குள் டவுன்பஸ்கள் தவிர புறநகர் பஸ்கள் செல்வதில்லை. இவை தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன.

இதனால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us