/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து விதிமுறைகள்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
போக்குவரத்து விதிமுறைகள்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
போக்குவரத்து விதிமுறைகள்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
போக்குவரத்து விதிமுறைகள்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 04, 2025 08:43 PM

உடுமலை; உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளர் கண்ணன், மாணவர்களுக்கு வாகன ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய சாலை விதிகள், பாதுகாப்பு வழிமுறைகள், ஓட்டுநர் உரிமம் எடுப்பது மற்றும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ், பயிற்றுனர்கள் சேகர், உமா சந்திரன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.