/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து விதிமீறல்; 2,010 வழக்குகள் பதிவு
/
போக்குவரத்து விதிமீறல்; 2,010 வழக்குகள் பதிவு
ADDED : ஏப் 18, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்; காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, விபத்துக்களை குறைக்க நகரில் பல்வேறு நடவடிக்கையை காங்கயம் போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நகரில் நடத்திய வாகன தணிக்கையில், மதுபோதையில் வாகன இயக்கம், ஹெல்மெட் அணியாமை, மொபைல் போன் பேசியவாறே டிரைவிங் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலீசார் அபராதம் விதித்தனர்.
அதில், 2,010 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிந்து, 39 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து போலீசார் கூறினர்.