ஆடை உற்பத்தி துறை நுணுக்கம்: கைகொடுக்கிறது பயிற்சி வகுப்பு
ஆடை உற்பத்தி துறை நுணுக்கம்: கைகொடுக்கிறது பயிற்சி வகுப்பு
UPDATED : ஜூலை 23, 2026 11:22 PM
ADDED : ஜூலை 23, 2026 07:52 PM
திருப்பூர்:திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பகுதி நேர ஆடை உற்பத்தி பயிற்சி மையத்தில், புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அப்பேரல் பேஷன் டிசைனிங், மெர்ச்சன்டைசிங், பேட்டர்ன் மேக்கிங் உள்ளிட்ட பயிற்சிகள் 100 சதவீதம் செய்முறை முறையில் வழங்கப்படுகின்றன. வயது வரம்போ, கல்வித் தகுதியோ தேவையில்லை.
பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்பாடும் செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 120 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது.
தினமும் காலை 6:30-8:30 மற்றும் மாலை 6:30-8:30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் 78451 84962 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம் என பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மணியன் தெரிவித்தார்.
