ADDED : பிப் 01, 2024 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதி, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதிகள் பயன்பாடு, குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாடு போன்ற மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து புத்தாக்கப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் இந்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
மாநகராட்சி கவுன்சிலர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாமில், நிதிகள் பயன்பாடு முறை; குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் மேலாண்மை ஆகியவற்றில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்; அதன் வரம்பு ஆகியன குறித்து, உரிய துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்சி அளித்தனர்.