sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தென்னையில் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பயிற்சி

/

 தென்னையில் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பயிற்சி

 தென்னையில் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பயிற்சி

 தென்னையில் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : பிப் 11, 2026 09:58 AM

Google News

ADDED : பிப் 11, 2026 09:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தென்னையில் நோய் தாக்குதலை தவிர்ப்பது குறித்து, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சார்பில், விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

திருப்பூரில், பிரதான பயிராக தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தென்னையில், இலை கருகல், வெள்ளை ஈ பூச்சி தாக்குதல், தஞ்சாவூர், கேரளா, சிவப்பு வண்டு தாக்குதல், நுண்ணுாட்டச்சத்து குறைபாடு, கருந்தலைப்புழு தாக்குதல் என, பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.

இந்நிலையில், பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சார்பில், தென்னைய தாக்கும் நோய்களில் இருந்து, மரங்களை பாதுகாப்பது குறித்த பயிற்சியும், விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வருகிறது.

விஞ்ஞானிகள் கூறுகையில், 'தென்னை பராமரிப்பு குறித்து, தென்னை வளர்ச்சி வாரிய நிதியுதவியுடன், விவசாயிகளுக்கு தொடர் பயற்சி வழங்கி வருகிறோம். வேளாண், தோட்டக்கலைத்துறையினருடன் இணைந்து, இத்தகைய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கி வருகிறோம்.

மத்திய அரசு, பட்ஜெட்டில் தென்னை மேம்பாடு திட்டம் அறிவித்துள்ளது. வேளாண் பல்கலை வழிகாட்டுதல் படி, விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us