/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தராசுடன் 'பாயின்ட் ஆப் சேல்' கருவி ரேஷன் விற்பனையாளருக்கு பயிற்சி
/
தராசுடன் 'பாயின்ட் ஆப் சேல்' கருவி ரேஷன் விற்பனையாளருக்கு பயிற்சி
தராசுடன் 'பாயின்ட் ஆப் சேல்' கருவி ரேஷன் விற்பனையாளருக்கு பயிற்சி
தராசுடன் 'பாயின்ட் ஆப் சேல்' கருவி ரேஷன் விற்பனையாளருக்கு பயிற்சி
ADDED : மே 14, 2025 11:11 PM
திருப்பூர், ; திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள, ரேஷன் பணியாளருக்கான பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 'பாயின்ட் ஆப் சேல்' கருவி பராமரிப்பு மாவட்ட பிரிவு வாயிலாக, ரேஷன் பணியாளருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், மாவட்ட மேலாளர் அருள்குமார் பேசியதாவது:
ரேஷன் கடையில், பொருட்களை 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் 'செலக்ட்' செய்த பிறகு, அந்த பொருளை மின்னணு தராசில் சரியான எடையில் வைத்தால் மட்டுமே 'பில்' போட முடியும். அதாவது, பில் போடும் போதே, ஒவ்வொரு பொருளும் எடை சரிபார்த்து வழங்கப்படும்.
முதன்முதலாக, தராசுடன், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை இணைக்கும் போது, நான்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தினமும், எடை இயந்திரத்தை தேர்வு செய்து, 'ப்ளூ டூத்' இணைக்கலாம். அதற்கு பிறகு, கடைக்குறியீடு மற்றும் மின்னணு ரேஷன் கார்டு குறியீடு பதிவு செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர் விவரத்தை, 'பயோமெட்ரிக்' சரிபார்ப்பின் மூலமாக சரிபார்க்கலாம்.
விற்பனை செய்யப்படும் பொருளின் பெயரை, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் தேர்வு செய்ததும், அந்த பொருளை சரியான அளவில், தராசில் வைக்க வேண்டும்; அந்த அளவு விற்பனை கருவியில் தெரியும். பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் அளவுகளை மட்டும், உள்ளீடு செய்யமுடியும். மற்ற பொருட்களின் எடை தராசு மூலமாகவே சரிபார்க்கப்படும்.
எடை தராசில், வழங்கப்பட வேண்டிய பொருள் ஒரு கிராம் அளவு கூடுதலாக இருந்தால் கூட விற்பனை செய்ய இயலாது. வழிமுறைகளை சரிவர பின்பற்றி, ரேஷன் பொருள் விற்பனைக்கு தயாராக வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.