/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதுகாப்பு மேலாண்மை மாணவர்களுக்கு பயிற்சி
/
பாதுகாப்பு மேலாண்மை மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 06, 2026 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: மடத்துக்குளம் அருகே பள்ளியில், பாதுகாப்பு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
மடத்துக்குளம் ஒன்றியம், மெட்ராத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மடத்துக்குளம் தீயணைப்புத் துறை சார்பில், பேரிடர் கால விபத்துகள், பாதுகாப்பு முறைகள், பாதுகாப்பு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
தீயணைப்புதுறை, அதன் பணிகள் குறித்து தீயணைணப்பு துறை அலுவலர்கள் விளக்கினர். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு இது குறித்த தேர்வு நடத்தப்பட்டு, முதல், 5 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

