/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறு தானியங்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி ...
/
சிறு தானியங்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி ...
சிறு தானியங்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி ...
சிறு தானியங்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி ...
ADDED : செப் 29, 2024 02:07 AM
அவிநாசி: அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சியில், வேளாண்மை துறை சார்பில் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்குவதற்கும், தொழில்நுட்ப செயல் விளக்க விழிப்புணர்வு பயிற்சி வகுப்பும் வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகி தலைமையில் நடந்தது.
இதில் சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க,மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், 18 லட்சம் ரூபாய் மானியம் அவிநாசி வட்டாரத்தில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் அபிவிருத்திக்காக வழங்கப்படுகிறது.
அதில், அவிநாசி வட்டாரத்தில் சோளம் தானிய உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல்,செயல் விளக்க திடல்களை அமைக்கும் விவசாயிகளுக்கு தட்டும் தானிய விளைச்சல் அதிகரிக்க கூடிய தொழில்நுட்பங்களை செயல் விளக்கத்துடன் மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பயிற்சி அளித்தார்.
தட்டும் தானியமும் கொடுக்கக்கூடிய உயர் விளைச்சல் தரக்கூடிய சோளரகம், கேழ்வரகு, கம்பு, கோ 10, விதை நேர்த்தி, கோடை உழவு உயிர் உரங்கள் உபயோகம், நுண்ணூட்டம் உபயோகம் ,ஊட்டமேற்றிய தொழு உரம் என ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த தலைப்புகளில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. விவசாயிகளுக்கு விதை உள்பட அனைத்து இடுபொருட்களும் மானியத்தில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர் சுஜி, உதவி வேளாண் அலுவலர் நாகராஜ், அட்மா திட்ட அலுவலர் வேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.