/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னை மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
/
தென்னை மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : ஏப் 21, 2025 09:39 PM

உடுமலை; உடுமலை, தளியில் உள்ள, தென்னை மகத்துவ மையத்தில், வேளாண் பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உடுமலை அருகேயுள்ள தளி திருமூர்த்திநகர் மத்திய தென்னை வளர்ச்சி வாரிய தென்னை மகத்துவ மையம் மற்றும் நாற்றுப்பண்ணையில், கோவை வேளாண் பல்கலையில், தோட்டக்கலை, வேளாண் பட்ட படிப்புகள் படிக்கும் மாணவ, மாணவியர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், பயிற்சி மேற்கொண்டனர்.
தென்னை மகத்துவ மைய உதவி இயக்குனர் ரகோத்துமன், தென்னை விதை உற்பத்தி, கன்று தேர்வு முதல் அறுவடைக்கு பின் செய்நேர்த்தி வரை தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள், நோய் தாக்குதல் காரணிகள், தீர்வுகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.
மேலும், தென்னையில் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு, விளக்கம் அளிக்கப்பட்டது.