/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை இந்தியா திட்டம் ஊழியர்களுக்கு பயிற்சி
/
துாய்மை இந்தியா திட்டம் ஊழியர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 10, 2024 04:18 AM
திருப்பூர் : துாய்மை இந்தியா - 2024 திட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.
துாய்மை இந்தியா திட்டத்தில், 'சுவச் சர்வேக்சன் 2024' என்ற தலைப்பில், உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், '3-ஆர்' என்ற தலைப்பில், திடக் கழிவுகளை கையாளும் முறைகள் குறித்து, 'ரெட்யூஸ், ரீயூஸ், ரிசைக்கிள்' முறை பின்பற்றுவது குறித்து உரிய துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் இந்த முகாம் நேற்று திருப்பூர் ரமணாஸ் ஓட்டல் அரங்கில் நடந்தது. திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகள், பல்லடம், திருமுருகன்பூண்டி, காங்கயம், தாராபுரம், உடுமலை நகராட்சிகளில் பணியாற்றும் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுல்தானா, மாநகர் நல அலுவலர் முருகானந்த் முன்னிலை வகித்தனர்.