/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி
/
கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 12, 2025 11:13 PM
உடுமலை: செல்ல பிராணிகளுக்கு கருத்தடை செய்வது குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு, உடுமலை மருத்துவ கல்லுாரியில், பயிற்சி வழங்கப்பட்டது.
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரியின் கால்நடை சிகிச்சை வளாகத்தில், இந்த பயிற்சி வகுப்பு நடந்தது.
செல்ல பிராணிகளுக்கு கள அளவில், கருத்தடை செய்வதை அடிப்படை நோக்கமாகக்கொண்ட இந்த பயிற்சியில், 15 அரசு கால்நடை மருத்துவர்கள் பங்கேற்றனர். நிறைவு விழாவில், உதவி பேராசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., சிகிச்சையியல் இயக்குனர் அனில்குமார், பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
மருத்துவ கல்லுாரி முதல்வர் மணிவண்ணன், திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

