/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோர்ட்டில் இ-பைலிங் நடைமுறை வருவாய் துறையினருக்கு பயிற்சி
/
கோர்ட்டில் இ-பைலிங் நடைமுறை வருவாய் துறையினருக்கு பயிற்சி
கோர்ட்டில் இ-பைலிங் நடைமுறை வருவாய் துறையினருக்கு பயிற்சி
கோர்ட்டில் இ-பைலிங் நடைமுறை வருவாய் துறையினருக்கு பயிற்சி
ADDED : ஜன 05, 2024 01:29 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, இ-பைலிங் முறையில் வழக்குப்பதிவு செய்வது குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
கோர்ட்களில் தற்போது வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறைகள், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, இ-பைலிங் முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்குகள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்வது இ-பைலிங் முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இ-பைலிங் நடைமுறை குறித்து, வக்கீல்கள், கோர்ட் ஊழியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு துறைகளில், கோர்ட் மற்றும் வழக்கு விவகாரங்களை கையாளும் ஊழியர்களுக்கு இ-பைலிங் நடைமுறை குறித்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.
திருப்பூர் மாவட்ட நீதித்துறை சார்பில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான இ-பைலிங் பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கம்ப்யூட்டர் பிரிவினர் இ-பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்வது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சி அளித்தனர்.