/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் போக்குவரத்தில் மாற்றம்
/
டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் போக்குவரத்தில் மாற்றம்
ADDED : அக் 06, 2024 03:33 AM

அவிநாசி : அவிநாசி, சேவூர் ரோடு, வடக்கு ரத வீதி பகுதியில், பாரதி வீதியில் இருந்து மாணிக்கவாசகர் திருமடம் வரை சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
அதில், நெடுஞ்சாலை துறையின் அளவீடு உள்ள பகுதியில் சாக்கடை கால்வாய் வடிகால் பணியை செய்யாமல் ஏற்கனவே இருந்த சாக்கடையை இடித்து விட்டு கட்டுமான பணிகள் நடைபெற்றது. அதேயிடத்தில், டிரான்ஸ்பார்மர் மற்றும் உயர் மின் கம்பமும் உள்ளது.
கால்வாய் கட்டும் பணிகள் தோண்டும்போது கம்பம் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. உடனடியாக மணல் மூட்டைகள் அடுக்கி மின்கம்பம் சாயாதவாறு நிறுத்தப்பட்டது. தற்போது நேற்று பணிகள் நடைபெற துவங்கியது. நெடுஞ்சாலைத்துறையினர் அளவீடுகள் செய்து அரசு நிலத்தை எடுத்து கொடுக்காததால், ஏற்கனவே இருந்த பகுதியில் கட்டுமான பணிகள் துவங்கியது.
இதற்காக, மேற்கு ரத வீதி மற்றும் சேவூர் ரோட்டில் பாலசந்தர் மருத்துவமனை சிக்னல் அருகேயும் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. உரிய அறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், வாகன ஓட்டிகள் திண்டாடினர்.