ADDED : ஜன 23, 2025 12:19 AM

திருப்பூர்; ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட, 170 பேரை போலீசார் கைது செய்தனர்.
போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், புதுப்பிக்காமல், 21 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கவில்லை.
அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளதை மீண்டும் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு., சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடந்தது.
அவ்வகையில், அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில், மண்டல பொது செயலாளர் செல்லதுரை தலைமையில் மறியல் போராட்டம் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்தது.
வெளியேறும் பஸ்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, ஆறு பெண்கள் உட்பட, 190 பேரை போலீசார் கைது செய்தனர்.