/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்கில் வீசப்பட்ட தொட்டிகள் அரசு நிதி வீணடிப்பு; அதிகாரிகள் அலட்சியம்
/
குப்பை கிடங்கில் வீசப்பட்ட தொட்டிகள் அரசு நிதி வீணடிப்பு; அதிகாரிகள் அலட்சியம்
குப்பை கிடங்கில் வீசப்பட்ட தொட்டிகள் அரசு நிதி வீணடிப்பு; அதிகாரிகள் அலட்சியம்
குப்பை கிடங்கில் வீசப்பட்ட தொட்டிகள் அரசு நிதி வீணடிப்பு; அதிகாரிகள் அலட்சியம்
ADDED : நவ 03, 2025 11:44 PM

உடுமலை:  உடுமலை பகுதியில், அரசு நிதியில் வாங்கப்பட்ட குப்பைத்தொட்டிகள் கிராமங்களில், பயன்படுத்த முடியாமல் குப்பை கிடங்கில், வீணாக கிடப்பது குறித்து, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.
வீடுதோறும் குப்பை சேகரிப்பது, தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிப்பது உள்ளிட்ட எவ்வித பணிகளும் முறையாக நடப்பதில்லை. இதனால், பல கிராமங்களில் சுகாதார சீர்கேடு நிரந்தரமாக உள்ளது.
கிராமங்களில் முன்பு குப்பைகளை சேகரிக்க மக்கள் தொகை அடிப்படையில், குப்பை தொட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
முன்புறம் குப்பையை எடுக்கும் வகையில் கதவு அமைப்புடன், ஒரு தொட்டி, தலா 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அரசு நிதியில், கொள்முதல் செய்யப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நேரடியாக குப்பை பெறும் திட்டத்தை செயல்படுத்தியதும், இந்த குப்பைத்தொட்டிகளை ஊராட்சி நிர்வாகத்தினர் பயன்படுத்தவில்லை.
பெரியகோட்டை உள்ளிட்ட ஒவ்வொரு ஊராட்சியிலும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குப்பைத்தொட்டிகள், குப்பைக்கிடங்கில் போடப்பட்டுள்ளது.
அவற்றில் பலவற்றை பயன்படுத்த முடியாது. துாய்மைக்காவலர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திணறி வரும் நிலையில், குளம், பி.ஏ.பி., கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில், நேரடியாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இச்செயலை தடுக்கும் வகையில், நீர்நிலை கரைகளில், வீணாக கிடக்கும் குப்பை தொட்டிகளை வைத்து கழிவுகளை சேகரிக்கலாம். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் எதையும் கண்டுகொள்ளாமல், ஒன்றிய அதிகாரிகள் உள்ளதால், அரசு நிதி பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதுடன், நீர்நிலைகளிலும் மாசடைந்து வருகிறது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

