தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அறிவின் பொக்கிஷங்கள்

 அறிவின் பொக்கிஷங்கள்

 அறிவின் பொக்கிஷங்கள்


ADDED : நவ 30, 2025 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி ருப்பூர் பார்க் ரோடு, மாவட்ட மைய நுாலகத்தில், நுாலக வார விழா நடந்தது. அதன் ஒரு பகுதியாக, புத்தகக் கண்காட்சி நடந்தது.

அப்துல் கலாமின், இந்தியா 2020, அக்னி சிறகுகள்; இறையன்பு எழுதிய ஏழாவது அறிவு, பத்தாயிரம் மைல் பயணம், சாகாவரம், போர்த்தொழில் பழகு உள்ளிட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.

படிப்பதும் சுகமே, மூளைக்குள் சுற்றுலா, மனிதனுக்கு மரணமில்லை உள்ளிட்ட புத்தகங்கள் தலைப்பை பார்த்ததும் வாங்க துாண்டும் வகையில் அமைந்திருந்தன.

சிறுவர், சிறுமியரை கவர விக்கிரமாதித்தன், தெனாலிராமன் கதைகள், பாரதி என்னும் கம்பளிப்புழு, ஆடு மேய்ப்பவனும் ஆட்டுக்குட்டியும் எனும் தலைப்பில் புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.

வாசகர் வட்ட தலைவர் புருேஷாத்தமன் கூறியதாவது:

அறிவு, கற்பனைத்திறன், மொழித்திறனை மேம்படுத்த புத்தகங்கள் முக்கியமானவை; ஒருவரின் நினைவாற்றலை அதிகரிக்கவும், சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்க்கவும் புத்தகங்கள் பெரிதும் உதவுகின்றன. வரலாறு, சமூக மாற்றத்தை கண்முன்னே காட்டும் புத்தகங்கள் அறிவின் பொக்கிஷமாக உள்ளன.

புத்தகம் வாசிப்பது மூளைக்கான உடற்பயிற்சி; நினைவாற்றல், கவனம் சிதறாமல் இருக்க புத்தகங்களை தொடர்ந்து படிக்கலாம். உங்கள் கால்களை அசைக்காமல் நீங்கள் பயணிக்க முடியும் என்றால், புத்தகம் படித்து பாருங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us