/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லண்டன் நோயாளிக்கு பாலா ஆர்த்தோவில் சிகிச்சை
/
லண்டன் நோயாளிக்கு பாலா ஆர்த்தோவில் சிகிச்சை
ADDED : அக் 09, 2024 12:37 AM

திருப்பூர் : வெரிகோஸ் பாதிப்பு ஏற்பட்ட லண்டனைச் சேர்ந்தவருக்கு திருப்பூர் பாலா மருத்துவமனை மருத்துவர் குழு சிகிச்சை அளித்து குணப்படுத்தியது.
லண்டனில் சமையல் கலைஞராக, அம்பிகை நாதன், 59 பணியாற்றி வருகிறார். இவருக்கு இரு கால்களிலும் வெரிகோஸ் பாதிப்பு ஏற்பட்டது. லண்டனிலுள்ள பல்வேறு மருத் துவமனைகளில், 3 ஆண்டாக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில், திருப்பூர் பாலா மருத்துவமனை குறித்து திருப்பூருக்கு வந்தார்.
பாலா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியன் தலைமையில் 5 மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. நான்கு சிகிச்சையில் அவர் முற்றிலும் குணமடைந்து, லண்டன் திரும்பினார்.
டாக்டர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''கடந்த வாரம், மலேசியாவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு முதுகு தண்டு வட பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்தார். தற்போது அம்பிகைநாதன் லேசர் அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளார். நம் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சிகிச்சைக்கு இங்கு வருவது, திருப்பூருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது,'' என்றார்.