ADDED : மார் 25, 2026 10:51 PM

அ நிறம் | அளவு
அவிநாசி:அவிநாசி நகராட்சி, 11வது வார்டு இஸ்மாயில் வீதியில், மேல்நிலைத்தொட்டிகள் உள்ள காம்பவுண்ட் வளாகத்தில், 30 ஆண்டு மே பிளவர் மரம் இருந்தது. வேர்கள் வலுவிழந்ததால் நேற்று மரம் அடியோடு சாய்ந்து அருகில் உள்ள வீட்டின் சிமென்ட் சீட் மேல் விழுந்தது. சிமென்ட் சீட் சேதமானது.
மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புக் கம்பிகளும் அறுந்தன. பொதுமக்கள் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. அப்பகுதி தி.மு.க. செயலாளர் ராயர் குமார் உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கும், அவிநாசி நகராட்சி ஊழியர்களுக்கும் தெரிவித்தார். மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதி முழுவதும் மின் வினியோகத்தை நிறுத்தினர். நகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
