ADDED : ஜூன் 22, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டு வெங்கடேஸ்வரா நகர் பிரதான வீதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இவை அனைத்தும், 10 முதல் 20 ஆண்டுகள் வரையிலான வயதுடையவை.
நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வேப்ப மரம் அடியோடு வெட்டி அகற்றப்பட்டது. அதனருகே இருந்த மற்றொரு மரம் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. இது, இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.