/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபத்தான நிலையில் மரம்; அகற்ற பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
ஆபத்தான நிலையில் மரம்; அகற்ற பக்தர்கள் எதிர்பார்ப்பு
ஆபத்தான நிலையில் மரம்; அகற்ற பக்தர்கள் எதிர்பார்ப்பு
ஆபத்தான நிலையில் மரம்; அகற்ற பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 02, 2024 11:05 PM

திருப்பூர்: சிவன்மலை கோவில் மலையடிவாரத்தில், சுவாமி திருவீதியுலா வரும் பாதையில் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காங்கயம், சிவன்மலை, சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலையடிவாரத்தில், நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுற்றுச்சுவர் அருகே பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது.
மரத்தின் மத்தியப் பகுதியில், பட்டுபோய், காய்ந்து வருகிறது. கடந்த சில நாள் முன் பலத்த காற்று வீசியதில், இதன் கிளை ஒன்று முறிந்து கோவில் சுவற்றின் மீது விழுந்தது.
முறிந்து விழுந்த கிளை மட்டும் அப்போதைக்கு வெட்டி அகற்றப்பட்டது. தற்போது இந்த மரம் ஆபத்தான நிலையில்ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சிவன்மலை கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கி நடைபெற்று வருகிறது.
தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், இந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில்தான் கந்தசஷ்டி விழா நிகழ்ச்சி நடைபெறும். வரும் 7ம் தேதி சூரசம்ஹாரா விழா நடக்கவுள்ளது.
இவ்விழாவில், பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்க வருவர். ஆபத்தான நிலையில் மரம் உள்ள வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெறும்.மரம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், திருவிழா நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது.
எனவே பக்தர்கள் பாதுகாப்பு கருதி உரிய வழிமுறைப்படி இந்த மரத்தை அகற்ற நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.