/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்ட பணிகள் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
/
சட்ட பணிகள் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : ஏப் 21, 2025 09:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,; உடுமலை, மடத்துக்குளம் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பெரிய வாளவாடி ஊராட்சியில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன், மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான விஜயகுமார் தலைமை வகித்தார்.
உடுமலை நீதித்துறை நடுவர் மீனாட்சி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பூஜா கண்மணி, வக்கீல்கள், பி.டி.ஓ., சிவகுருநாதன், ஊராட்சி செயலாளர் கந்தவடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாளவாடி ஊராட்சி பகுதியில், 120 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.