ADDED : ஏப் 18, 2025 11:49 PM

அவிநாசி: அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு, அவிநாசி பேரூராட்சி, ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை, வனம் இந்தியா பவுண்டேஷன் மற்றும் களம் அறக்கட்டளை ஆகியன சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது.
அவிநாசி சேவூர் ரோட்டில், சூளை பகுதியில் எம்.பி.கே., லே-அவுட்டில் உள்ள பூங்காவில், நடந்த இந்நிகழ்ச்சிக்கு, அவிநாசி சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நடுவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் சிறப்புரையாற்றினார். முன்னதாக, மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்மணி வரவேற்றார்.
வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் செல்வராஜ், மூத்த வழக்கறிஞர்கள் கனகராஜ், இளங்கோவன், இளவரசு, கார்த்திகா, அவிநாசி பி.டி.ஓ., ரமேஷ் (பொது), விஜயகுமார் (கிராம ஊராட்சிகள்), பேரூராட்சி தலைவர் தனலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து வேட்டுவபாளையம் ஊராட்சியில் சிறு தொழில் பேட்டையில் உள்ள வனம் அடர் வன வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மொத்தம், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.