/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
/
மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ADDED : செப் 18, 2025 09:33 PM

உடுமலை; ரோட்டோர மரங்களை பராமரிக்கும் வகையில், மரக்கன்றுகளை சுற்றிலும் களைகளை அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட மாவட்ட முக்கிய ரோடுகள் மற்றும் பிற ரோடுகளில், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இந்த மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் வகையில், வட்டப்பாத்திகள் அமைத்து, களைகளை அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, துங்காவி-மடத்துக்குளம் ரோட்டில் இப்பணிகள் நடக்கிறது.
அனைத்து ரோடுகளிலும் ரோட்டோர மரக்கன்றுகளை பராமரிக்கும் வகையில், பணிகள் நடைபெற உள்ளது என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.