ADDED : டிச 21, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் அடுத்த, சித்தம்பலம் கிராமத்தில், குழாய் பதிப்பு பணியின் போது, மரம் ஒன்று வேருடன் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது.
பசுமை ஆர்வலர்கள் கூறுகையில், 'குழாய் பதிப்பை ஒரு அடி துாரம் தள்ளி மேற்கொள்ள வாய்ப்பு இருந்தும், மரம் வெட்டப்பட்டுள்ளது. குழாய் பதிப்பு பணிக்காக, அனுமதி இன்றி மரம் வெட்டிய ஒப்பந்ததாரர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்படுவதாக, பல்வேறு புகார்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை' என்றனர்.

